கீரை வகைகளும் அதன் பயன்களும்

    1. முருங்கைக் கீரை – நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்
    2. முள்ளங்கி கீரை – நீரடைப்பு நீக்கும்
    3. பொன்னாங்கன்னி கீரை – மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்
    4. மணத்தக்காளி கீரை – வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்
    5. தூதுவளை – ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்
    6. வல்லாரை – மூளைக்கு பலம் தரும்
    7. அகத்தி கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்
    8. குப்பை கீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்
    9. அரைக்கீரை – ஆண்மை பெருக்கும்
    10. முடக்கத்தான் கீரை – கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்
    11. காசினிக் கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்
    12. கொடி காசினி – பித்தம் தணிக்கும்
    13. பசலைக் கீரை – தசைகளை பல மடையச் செய்யும்
    14. சிறு பசலைக் கீரை – சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்
    15. கொடி பசலைக் கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்
    16. விழுதிக் கீரை – பசியைத் தூண்டும்
    17. மஞ்சள் கரிசலை – கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.
    18. புளியங்கீரை – சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்
    19. பிண்ணாக்கு கீரை – வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்
    20. தும்பை – அசதி, சோம்பல் நீக்கும்
    21. சுக்கா கீரை – ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்
    22. வெள்ளை கரிசலைக்கீரை – ரத்த சோகையை நீக்கும்
    23. புண்ணக் கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்
    24. புதினாக் கீரை – ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்
    25. நஞ்சு முண்டான் கீரை – விஷம் முறிக்கும்
    26. கல்யாண முருங்கை கீரை – சளி, இருமலை துளைத்தெறியும்
    27. வெள்ளைக் கீரை – தாய்ப்பாலை பெருக்கும்
    28. பருப்பு கீரை – பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்
    29. சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்
    30. புளிச்ச கீரை – கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்
    31. நருதாளி கீரை – ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்
    32. மணலிக்கீரை – வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்
    33. வெந்தயக் கீரை – மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்
    34. தவசிக் கீரை – இருமலை போக்கும்
    35. சாணக் கீரை – காயம் ஆற்றும்
    36. துயிளிக் கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்
    37. முளைக் கீரை – பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்
    38. துத்திக் கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்
    39. கார கொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்
    40. மூக்கு தட்டை கீரை – சளியை அகற்றும்
    41. பரட்டைக் கீரை – பித்தம், கபம், நோய்களை விலக்கும்