மனிதம் மட்டும்

mooda

அறிவியல் உலகம் உருண்டை என்கிறது
ஆன்மீகம் தட்டை என்றது.!

அறிவியல் பூமி சூரியனை சுற்றுகிறது என்றது
ஆன்மீகம் சொன்னவனை விஷமிட்டு கொன்றது!

அறிவியல் கிரஹனம் கிரஹங்கள் நேர் கோட்டில் என்றது
ஆன்மீகம் ராகு கேதுவை விழுங்கல் என்றது!

அறிவியல் அம்மையை நோயென்றது
ஆன்மீகம் ஆத்தாவின் கோவமென்றது!

அறிவியல் குழாயில் குழந்தை கொடுத்தது
ஆன்மீகம் அரச மரத்தை சுத்த சொன்னது!

அறிவியல் அனைவரும் சமம் என்றது
ஆன்மீகம் வருனம் நான்கு என்றது!

அறிவியல் முயற்சிதான் பலன் என்றது
ஆன்மீகம் கர்மா ஜாதக ரேகை வாஸ்து என்றது!

அறிவியல் விலங்கு <அம்மன மனிதன்< நாகரீக மனிதன் <பரினாமம் என்றது

ஆன்மீகம் நாகரீக மனிதன்>அம்மன மனிதன்>விலங்கு பிரனாமம் என்றது!

அறிவியல் ஆசை தான் முயற்சியின் பொறி என்றது
ஆன்மீகம் ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்றது!

அறிவியல் சொல்லும் எல்லாவற்ரையும் அறிவு நம்புகிறது
ஆன்மீகம் சொல்லும் எதையும் அறிவு நம்ப மறுக்கிறது!

இருந்தும் அறிவியலை விட ஆன்மீகம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இங்கு சவுகரியமான பொய்களுக்கு கடினமான் உண்மையை விட ஆதரவு அதிகம்.

Advertisements