Harassment after marriage, Need your help and support

Ameera {name changed} I married on 11th may 2012, 15 days of marriage life was good in laws place, after that they started torturing me every day by mother in law sister in law and other family members they humiliated me and my family member too bcoz we don’t have own house, after marriage I came to knew this marriage happened against my mother in law and father in law.. only my husband was agreed.
Hardily I spent 6 months in laws place… My husband loves me he can’t do anything or protect me from elder sister in laws bcoz he is younger in family. My husband told me and ensure on oct month 2012 for separate house on 2nd nov he dropped me to my mother place for pregnancy check up from there on words he never turn back to my place nor he is bother to know how we are living, I have 7 months boy baby we informed his family no one are responding us..This marriage happened only bcoz of my elder sister in law she is doc… 
All this problem happened bcoz of my third sister in law she is divorcee she is govt employee she ruled on us she stays in my in laws place… 
my request to my husband is just take us way from in laws home keep and give us our rites that’s it…
for this my husband is not responding me past one year 3 months in between he changed his contact numbers too for that now I lodged a complaint on 4th dec to women police station blore from there there is no response yet..
My husband lodged false complaint on my brothers stating that we threatening him, my husband his playing with our feelings
I don’t know what I should do further am really worried about my marriage life I just want my baby’s father 
I request you to advise me, what to do next please help me out I want a solution from peoples.

Thanking you

Yours
(Ameera name changed)

Advertisements

ஜெ. பிரதமர் ஆக முடியுமா? ஆக வேண்டுமா?

jaya2_1694616h

நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு – கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜெயலலிதாதான்

அடுத்த பிரதமர் என்ற முழக்கம் அ.தி.மு.க-வினரால் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. கூடவே அ.தி.மு.க-வினர் முன்வைக்கும் இன்னொரு முழக்கம் : நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்பது. ஒருவர் எப்படி நிரந்தர முதல்வராகவும் பிரதமராகவும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் என்ற புதிரைப் புரிந்துகொள்ள முதலில் அ.தி.மு.க-வின் அம்மாயிஸத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

அ.தி.மு.க-வினரின் ‘ஞ’ போல் வளையும் மரியாதைக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக அவர்கள் முடியுமானால் ஜெயலலிதாவுக்குதான் அடுத்த நோபல், ஜெயலலிதாதான் அடுத்த ஐ.நா. சபைப் பொதுச்செயலாளர், அவர்தான் அடுத்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் என்றெல்லாம்கூட சொல்ல விரும்பக்கூடும். அதையெல்லாம் தமிழக அரசியல் கலாச்சாரத்தின் வெகுஜனப் பொழுதுபோக்குக் கூறுகள் என்ற அளவில் ஒதுக்கிவைத்துவிட்டு நிஜமாகவே, ஜெயலலிதா இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறதா, அல்லது அது அ.தி.மு.க-வினரின் பகல் கனவு மட்டும்தானா என்று ஆராயலாம்.

தமிழ் பிரதமர்

தமிழர்கள் பிரதமரைவிட உயர் பதவியான இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வந்திருக்கிறார்கள். காரணம் அது ஒருவிதத்தில் நியமனப் பதவி மாதிரிதான். மத்தியில் ஆளும் கட்சி விரும்புகிறவரை அதற்குக் கொண்டுவந்துவிட முடியும். தவிர, எப்போதும் பிரதமர் பதவி வட இந்தியாவிலேயே இருந்துவருவதால், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் பதவிகளைத் தென்னிந்தியருக்கு ஒரு ‘கோட்டா’ போல அளித்து சமன்செய்வதை நேரு காலம் முதல் பின்பற்றிவந்திருக்கிறார்கள்.

காமராஜர் நிராகரித்த வாய்ப்பு

பிரதமராகும் வாய்ப்பு தமிழகத் தலைவர்களுக்கு இதற்கு முன்பு இருந்ததா என்றால், அது ஓரிரு முறை மட்டுமே இருந்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஓரளவேனும் அறியப்பட்டிருக்கக்கூடிய தலைவராக இருந்தவர்கள் மிகக் குறைவு. காங்கிரஸுக்குள் மாநிலத் தலைவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்த காலத்தில் இருந்த தமிழகக் காமராஜர் அப்படி அறியப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அவர் பிரதமராகும் வாய்ப்பு, நேரு- சாஸ்திரி காலத்துக்குப் பின்னர் கனிந்திருந்தது. ஆனால் அவர் அதை விரும்பவில்லை. இந்தியாவின் பிரதமராக வருபவருக்கு, இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் ஒன்றேனும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் தனக்கு அப்படித் தெரியாத நிலையில் தான் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும்கூட ஆக விரும்பவில்லை என்றும் காமராஜரே தன்னிடம் சொன்னதாகப் பிரபலப் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருக்கிறார்.

தமிழருக்கு வாய்ப்பு வரும் நிலையே இந்திய அரசியலில் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்கு இருக்கவில்லை. ஒற்றைக் கட்சியே வலிமையாக டெல்லியில் ஆட்சி நடத்தும் காலம் முழுக்கவும் அது பெரும்பாலும் காங்கிரஸாகவே இருந்தது. அதில் இந்திரா காலத்திலிருந்து காமராஜர் போன்ற மாநிலத் தலைவர்கள் உருவாகவே முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் காங்கிரஸே பல மாநிலங்களிலும் பலவீனமாகி, இனி டெல்லியில் மாநிலக் கட்சிகளின் கூட்டணி உதவியுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைமை 1996-ல் ஏற்பட்டது.

கூடிவந்த இன்னொரு வாய்ப்பு

அப்போதுதான் இன்னொரு முறை ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம். அன்றைய நிலை என்ன என்று சற்று விவரமாகக் கவனிப்பது இன்றைய அரசியல் ஆரூடங்களுக்குப் பயன்படும். அப்போது பா.ஜ.க-வின் 15 நாள் அரசு கவிழ்ந்த பின் காங்கிரஸ் அல்லாத ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதன் 179 எம்.பி-களில் தமிழகத்திலிருந்து தி.மு.க-வும் தமிழ் மாநில காங்கிரஸுமாக அனுப்பியவர்கள் மட்டும் 39 பேர். மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணியிலிருந்து 33 பேர். பிகாரிலிருந்து 25 பேர். உத்தரப் பிரதேசத்திலிருந்து 20 பேர். கர்நாடகத்திலிருந்து 16 பேர். ஆந்திரத்திலிருந்து 16 பேர். மொத்தத்தில் 179 எம்.பி-களில் 83 பேர் தென் மண்டலம். அதில் மிகப் பெரிய பங்களிப்பு தமிழ்நாட்டுடையதுதான். இடதுசாரி ஜோதிபாசுவும் தெலுங்கு தேசமும் பிரதமர் பதவியை விரும்பாத நிலையில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்குமே வாய்ப்பு மிஞ்சியது.

தமிழ்நாட்டிலிருந்து யார் என்றபோதுதான் அந்தத் தவறு நிகழ்ந்தது. மூப்பனாரைக் கேட்டார்கள். அவர் மறுத்துவிட்டார். அதன் விளைவாக, கர்நாடக தேவ கௌடா பிரதமரானார். நியாயப்படி அப்போது தமிழகத்திலிருந்து மிக அதிக எம்.பி-களை அளித்த தி.மு.க-வுக்கு – கருணாநிதிக்குத்தான் பிரதமர் பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மூப்பனாரைவிட அரசியல் அனுபவமும் நிர்வாக அனுபவமும் அரசுப் பொறுப்பில் இருந்த அனுபவமும் பல மடங்கு பெற்றவர் கருணாநிதி. அவர் பிரதமராகிவிட்டால் தி.மு.க-வில் அடுத்த முதல்வர் யார் என்ற சிக்கலும் கிடையாது. பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் என்று வரிசையாகப் பலர் இருந்தனர். ஆனால், கருணாநிதியைப் பிரதமராக வரவிடக் கூடாது என்பதற்காகவே மூப்பனார் பெயர் சொல்லப்பட்டு, தமிழக வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டது (இதை அப்போதே நான் எழுதியிருக்கிறேன்).

இன்னொரு வாய்ப்பா 2014?

அப்படி ஒரு வாய்ப்பு 2014-ல் வரும் என்பதுதான் ஜெயலலிதாவைப் பிரதமராக்க விரும்புவோரின் கணக்கு. காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என்பதே பெருவாரியான கருத்துக் கணிப்புகளின் முடிவாகும். காங்கிரஸுக்கு சுமார் 130 இடங்களும் பா.ஜ.க-வுக்கு சுமார் 150 இடங்களும் கிட்டலாம் எனப்படுகிறது. எஞ்சியிருக்கக்கூடிய 260 இடங்களை பல்வேறு மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள் பங்குபோடப்போகின்றன. இடதுசாரிகள் இந்த முறை மேற்கு வங்கத்திலேயே முன்பைவிட அதிகமாக வென்று சுமார் 25 இடங்கள் வரை அடையலாம் என்பது கணிப்பு.

மோடியை முன்னிறுத்தியதால், பா.ஜ.க-வுடன் கூட்டுசேர விரும்பாத பல தேசிய, மாநிலக் கட்சிகள் இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணிக்கு முயற்சிப்பார்கள். அப்போது

மூன்றாவது அணியில் மிக அதிக எம்.பி-களை வைத்திருக்கக்கூடிய கட்சியின் தலைவருக்கே பிரதமர் வாய்ப்பு என்றாகும்போது, முலாயம், மாயாவதி, நிதீஷ், ஆகியோரைவிட அதிகமாக ஜெயலலிதாவிடம் 35 எம்.பி-கள் வரை இருப்பார்கள்; அப்போது உடன் இருக்கக்கூடிய இடதுசாரிகளும் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள் என்பது அவர்கள் வியூகம். ஒருவேளை காங்கிரஸ் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க விடாமல் தன் ஆதரவுடன் அமைப்பதையே விரும்பும் பா.ஜ.க. அப்போது வெளியில் இருந்துகொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கக்கூடும்; ஜெயலலிதா பிரதமராகிவிடலாம் என்பது இன்னொரு வியூகம். இந்த வியூகங்களின்படி எல்லாம் நடந்தால், ஜெயலலிதாவுக்குப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எல்லாம் அப்படி நடக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எதுவும் நடக்கலாம்.

தகுதியானவரா?

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்தானா ஜெயலலிதா? பிரதமராக மோடிக்கோ ராகுலுக்கோ தகுதி உண்டா உண்டா என்று கேள்வி எழுப்புவதுபோல இதையும் அலசத்தான் வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம், ஹிந்தி உடபட பல மொழிகள் தெரியும் என்பதால் மட்டுமே காமராஜருக்கு இல்லாத தகுதி அவருக்கு இருப்பதாகக் கருதிவிட முடியாது. மன்மோகன் சிங்கை விட மோசமாகவா இருக்கப்போகிறார் என்ற வாதங்களும் உதவாது.

கூட்டணியின் அடிப்படை ஜனநாயகம்

ஜெயலலிதா ஒரு முதல்வராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார், ஒரு கட்சித் தலைவராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர் கட்சியில் துளியும் உள்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான அம்சம். காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிலும் எத்தனை கோளாறுகள் இருந்தாலும், அவை எல்லாவற்றிலும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கவும் விவாதிக்கவும் இடம் இருந்துகொண்டே இருப்பதுதான் அவற்றை உயிரோடு வைத்திருக்கின்றன. ஜெயலலிதாவின் அ.தி.மு.க அப்படிப்பட்ட கட்சி அல்ல. ஒரு தனியார் முதலாளி நடத்தும் நிறுவனம்போல, முதலாளியைத் தவிர வேறு யாருக்கும் எதையும் சொல்ல உரிமையற்ற இடமாகவே அது இருக்கிறது.

சரியாக ஓராண்டு முன்னால் எழுதிய ஒரு கட்டுரையில் சொன்னேன்: “ஊழல் அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவர் என்றாலும், கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும்கூட ஒருவர் தன் குறையை அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. இப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச்செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. முதல்வர் கவனத்துக்குப் பிரச்சினையை எடுத்துச்செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தன் குடிமக்களுடன் எந்தத் தகவல்தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும் ? என்ன நிர்வாகம் செய்ய முடியும் ? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி, சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தன் மக்களின் நிலைபற்றி, நிர்வாகத்தின் குறைகள்பற்றி அவருக்கு யார் தகவல் சொல்வார்கள் ? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி.”

இப்படிப்பட்ட அணுகுமுறையில் இருக்கும் ஒருவரால் இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறான சிக்கல்கள் உள்ள ஒரு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியுமா? காவல் துறை, உளவுத் துறை, அச்சப்படும் நிர்வாக இயந்திரம், அடிமை மனநிலையுடைய கட்சியினரை மட்டும் கொண்டு ஒரு நாட்டை ஒருபோதும் ஆள முடியாது. 2016-க்குள் ஜெயலலிதாவின் இந்தப் போக்கு மாற்றம் அடைந்து ஜனநாயகபூர்வமான, மக்களிடம் செவிகளுடைய ஒரு முதல்வராகச் செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக்கொண்டால் மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் என்று ஏற்க முடியும்.

இப்போதைய நிலையிலேயே அவர் பிரதமரானால், இந்தியாவுக்கு நேரும் தொடர் விபத்துகளில் இன்னொன்றாகவே அது இருக்கும். ஒரு தமிழர் முதன்முறையாகப் பிரதமர் ஆகிறார் என்று மட்டும் மகிழ்ச்சி அடைய முடியாது. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் தமிழர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று மகிழ்ச்சி அடைவது போன்றது அது.

                                                                                                                                         – ஞாநி

சூப்பர் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்- ஜீவா

Imageஅரேபியர்களின் காதல் தேசமான ‘மொராக்கோ’ நாட்டில், ‘யான்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார், ஜீவா. புரமோஷன், படப்பிடிப்பு, கதை கேட்பது என்ற பரபரப்பான பணிகளுக்கு நடுவிலும் ஒரு நல்ல அப்பாவாக தன் மூன்று வயது மகன் ஸ்பார்ஷாவுடன் சேர்ந்து வீட்டில் ‘சடுகுடு’ ஆடிக்கொண்டிருந்தார். பேட்டிக்காக சிறிது நேரம் ஒதுக்குமாறு கேட்டதும் சடுகுடு ஆட்டத்தை நிறுத்தி மகனை மடியில் வைத்துக்கொண்டே தயாரானார்.

‘என்றென்றும் புன்னகை’ ரிலீஸ், ‘யான்’ படப்பிடிப்பு, சமுத்திரக்கனியோடு புதுப்பட ஒப்பந்தம் என்று உங்கள் திரையுலக வாழ்க்கை றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறதே?

2013, என் கேரியரில் மறக்க முடியாத ஆண்டு. ‘என்றென்றும் புன்னகை’ முன்பே வரவேண்டிய படம். ‘மல்டி ஸ்டார்’ படம் என்பதால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ‘யான்’ படப்பிடிப்பு இன்னும் 26 நாட்கள் மீதம் இருக்கு. மொராக்கோ நாட்டில் 15 நாட்கள் ஷூட்டிங் பாக்கி. படத்தின் இரண்டாவது பாதியின் முக்கியமான காட்சிகளை அங்குதான் படமாக்குகிறோம். அங்கே படப்பிடிப்பு முடிந்ததும் மற்ற வேலைகளும் வேகமாக முடிந்துவிடும். ‘நிமிர்ந்து நில்’ படம் முடித்ததும் நானும், இயக்குநர் சமுத்திரக்கனியும் சந்தித்தோம். அருமையான ஒரு கதையைச் சொன்னார். உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.பிப்ரவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

நடிப்பு மீட்டருக்குள் கச்சிதமாக பொருந்தும் நடிகர் என்று ஷங்கர் உங்களைப் பாராட்டினாரே?

நானும் 3, 4 படங்கள் தொடர்ச்சியாக தோல்வியைக் கொடுத்த நடிகன்தான். இருந்தாலும் ஜீவா படங்களுக்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் விருப்பம் இருக்கு. என் கதாபாத்திரங்களை நான் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு ஆக்டிங் மீட்டர் வைத்திருக்கேன். ஒரு கதாபாத்திரத்தின் ஓட்டத்தை புரிந்து கொண்டு, காட்சி எத்தனை நிமிடத்துக்குள் இருந்தால் ஷார்ப்பா இருக்கும் என்ற திட்டத்தோடு நடிப்பை வெளிப்படுத்துவேன். ஷங்கர் இதைத்தான் சொல்கிறார். ‘ஜீவா, கண்டிப்பாக இதை சரியாகச் செய்வார்’ என்று ரசிகன் எதிர்பார்த்தபடி செய்வது ஒரு நல்ல நடிகனுக்கு அழகு. ‘ஜீவா, எதிர்பார்க்காததை செய்திருக்கிறாரே’என்று பெயரெடுக்கும்படி நடிப்பது ஒரு சூப்பர் நடிகன் செய்வது. நான் இங்கே சூப்பர் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்.

Image

‘ஆசை ஆசையாய்’, ‘தித்திக்குதே’ ஆகிய படங்களை எல்லாம் திரும்பி பார்ப்பீங்களா?

நான் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். எல்லாமே ஏதோ ஒரு வகையில் நல்ல படங்கள் என்றுதான் எனக்குத் தோன்றும். அதுவும் ஒரு நல்ல அனுபவம். இப்போதுகூட ‘எஸ்.எம்.எஸ்’ மாதிரி ஒரு படம் கொடுங்க நண்பா, என்கிறார்கள். மாட்டவே மாட்டேன். அப்படி ஒரு கதை என்று ஒன் லைனில் யார் வந்தாலும் கதையே கேட்பதில்லை. என்னை பொறுத்தவரை ஒரு ‘டிரண்ட் செட்டர்’ நடிகன் என்ற பெயருடனேயே பயணிக்க வேண்டும்.

அப்படி டிரண்ட் செட்டிங் படங்களை கொடுத்தவன் நான் என்பதும் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. இல்லையென்றால் ‘ஈ’. ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘ டிஷ்யூம்’ மாதிரியான வெவ்வேறு விதமான படங்களை என்னிடம் இருந்து பார்த்திருக்க முடியாதே. கடந்த 10 ஆண்டுகளில் நான் வித்தியாசமான படங்களைத்தான் கொடுத்திருக்கிறேன். ஒரே மாதிரியான ஜீவாவை நீங்கள் படங்களில் தேடினால் கிடைக்கமாட்டான்.

‘ஜில்லா’ படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறீர்களாமே?

சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சா, நடித்த 5 நிமிஷத்துல பசங்க என்கிட்டயே போன் பண்ணி, ‘ஜில்லா டான்ஸ் சூப்பர்ப்’னு சொல்றாங்க. டெக்னாலஜி அவ்ளோ வளர்ந்தாச்சு. மோகன்லால், விஜய் இணைந்து ஆட்டம் போடும் ஒரு பாட்டில் கொஞ்ச நேரம் வந்து போகிறேன்.

உங்களோட காக்டய்ல் நண்பர்கள் ஆர்யா, விஷால் எல்லோரும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம சுத்திக்கிட்டிருக்காங்களே?

அது அவங்க பிரச்சினை. நான் என்னைக்குமே அவங்ககிட்ட கல்யாணம் பத்தி ஆலோசனை கொடுக்கவே மாட்டேன். ஒரு தடவை இதுபத்தி ஆர்யாகிட்ட கேட்டப்ப, ‘‘ஏன், நீ படுற கஷ்டத்தை நாங்களும் படணும்னு ஆசையா!’’ன்னு கிண்டல் பண்ணினான். அவர்களுக்கான நேரம் சரியா அமையும்போது அது இயல்பா நடக்கும்.

தயாரிப்பாளர் ஜீவா, இயக்குநர் ஜீவா இப்படி எல்லாம் அவதாரம் எடுக்கப் போறதா கேள்விப்பட்டோமே?

ஏற்கனவே தயாரிப்பாளர்தான். அது அப்பாதான்னு உங்களுக்கும் தெரியும். புதிதா ஒரு பேனர்ல தொடங்கலாம் என்று ஒரு திட்டம் இருந்தது. அந்த பேனரில் சோதனை முயற்சியிலான படங்களை மட்டுமே எடுக்க நினைச்சேன். நண்பர்கள் வேண்டாம்னு சொன்னாங்க. அதனால அது அப்படியே இருக்கு. எதிர்காலத்தில் பார்க்கலாம்.

முதல்ல இயக்குநராகிற ஆசை இருந்துச்சு. இப்பக்கூட ஒரு ஆக் ஷன் பெல்ட், ஒரு அழகான காதல் காட்சி இயக்க விட்டால் நல்லா இயக்குவேன். முழு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்போதைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகர்கள்ல ஒருத்தனா இருக்கேன். அதை அழகா நகர்த்திக் கொண்டு போகலாம்.

ஷாருக், அமீர்கான், ஹிர்த்திக் ஆகிய முன்னணி பாலிவுட் நடிகர்கள் எல்லாம் அவங்க படத்தின் புரமோஷனுக்காக இங்கே வருகிறார்கள். நம்ம ஊரில் உள்ள மாஸ் ஹீரோக்கள் ஒதுங்குகிறார்களே?

நான் தமிழ்நாடு முழுக்க டூர் போய்த்தான் எப்படி நடிக்கணும் என்பதை கற்றுக்கொண்டேன். புரமோஷன் விஷயத்தில் பெரிய ஹீரோக்கள் மட்டும் என்று இல்லை. எல்லோருமே வர வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். அந்த கலாச்சாரம் நம்மிடமும் வரணும். அதுதான் என் ஆசையும்.

தனுஷின் அடுத்த ‘கொலவெறி’ முயற்சி!

”இது அஞ்சு வருஷமா என் மனசுக்குள்ளயே ஓட்டிப் பார்த்த ஸ்கிரிப்ட். தனுஷ் சாரோட ஏழெட்டுப் படங்கள் டிராவல் பண்ணிருக்கேன். ஆனா, நான் டைரக்ஷன் எண்ணத்துல இருக்கேன்னு அவருக்குத் தெரியாது. சும்மா பேசிட்டு இருந்தப்ப, என் டைரக்ஷன் ஆசையைச் சொல்லி படத்தின் ஒன்லைன் சொன்னேன். ‘சூப்பர் வேல்ராஜ். நம்ம பேனர்ல நீங்களே டைரக்ட் பண்ணிடுங்க. ஹீரோவுக்கு நான் ஓ.கே-வா?’னு கேட்டார். அவரோட 25-வது படத்தை என்னை நம்பிக் கொடுத்திருக்கார். ‘உன் பொறுப்பு ஜாஸ்தியா இருக்குடா’னு உற்சாகமா ஓடிட்டு இருக்கேன்!” உள்ளுக்குள் புரளும் சந்தோஷ மின்னல்களை அடக்கிக்கொண்டு நிதானமாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் சாருக்கு இயக்குநர் புரமோஷன்!

”தனுஷ் கேரக்டர் என்னன்னு தலைப்பே சொல்லிடுது. அவர் இதுவரை அப்படித்தானே பெரும்பாலும் நடிச்சுட்டு இருக்கார்?”

”அது எங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்தானே. ‘வேலையில்லா பட்டதாரி’ தலைப்பே ஹீரோ கேரக்டரையும் கதையையும் சொல்லிடும். மிச்ச சுவாரஸ்யங்களை மட்டும் நாங்க சொன்னாப் போதும்ல. எதையும் பாசிட்டிவாப் பாருங்க பிரதர். நகைச்சுவை, ஆக்ஷன், சென்ட்டிமென்ட்னு எல்லாமே பக்கா பேக்கேஜா இருக்கும். எடிட் பண்ணி முதல் பாதி படம் பார்த்த தனுஷ், ‘நீங்க வெளியில் எத்தனை படங்களுக்கு வேணும்னாலும் பண்ணிக்கங்க. ஆனா, வருஷத்துக்கு ஒரு படம் நம்ம கம்பெனிக்கு பண்ணணும்’னு சொல்லியிருக்கார். வேல்ராஜ் ரொம்ப ஹேப்பி!”

” ‘கொலவெறி’ ஹிட்டுக்குப் பிறகு அனிருத்-தனுஷ் கூட்டணி. என்ன மேஜிக் பண்ணியிருக்காங்க?”

”இன்னைக்கு தியேட்டர்ல ‘அனிருத்’னு பேர் பார்த்தா, கிளாப்ஸ் அள்ளுது. பையன் அந்தளவுக்கு எனர்ஜியோட மியூசிக் கொடுக்கிறார். ஜனவரி முதல் வாரம் இசை வெளியீடு. படத்தில் ஆறு பாட்டையுமே தனுஷ் சார்தான் எழுதியிருக்கார். அதுல ஒரு பாட்டை ஜானகியம்மா பாடியிருக்காங்க. மத்த அஞ்சு பாட்டையும் தனுஷே பாடியிருக்கார். ‘வேலையில்லா பட்டதாரி…தொட்டுப்பார்த்தா ஷாக்கடிக்கும் வேறமாரி’… இந்த மாதிரி சிம்பிளான வரிகள்தான். ஆனா, ‘கொலவெறி’ அளவுக்கு ஹிட் அடிக்கும் ரெண்டு பாட்டு இருக்கு!”

”இயக்குநர் ஆகிட்டீங்க… இனி டைரக்ஷன் மட்டும்தான் பண்ணுவீங்களா?”

”அட, ஒளிப்பதிவுதான் என் ஆத்மா. அதை எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நிறைய இயக்குநர்கள் தங்கள் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணச்சொல்லிக் கேட்டாங்க. அந்த சமயத்துல, ‘தனுஷ் சார் படத்தை டைரக்ட் பண்ணப்போறேன்’னு சொன்னதும், ‘ஒளிப்பதிவில் பிஸியா இருக்கும்போது டைரக்ஷன் தேவையா?’னு வருத்தப்பட்டாங்க.

வெற்றிமாறன் சார்கிட்ட சொன்னேன். ‘அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்களோடது நல்ல ஸ்கிரிப்ட். பிரமாதமா வரும். உங்க படத்தை முடிச்சிட்டுவாங்க. அடுத்தும் நாம சேர்ந்து பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார்.

இப்ப ‘வேலையில்லா பட்டதாரி’ வேலைகளுக்கு நடுவிலேயே, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’… அப்புறம் ‘பொறியாளன்’னு ரெண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு பண்றேன். அதுக்கு ஏத்த மாதிரி தனுஷ் சார் தன் கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திருக்கார். தனுஷ்-ஐஸ்வர்யா ரெண்டு பேரோட பெருந்தன்மைதான் இதுக்குக் காரணம்!”

ரஜினி பற்றி ரஜினி!

December 12, 2013

‘இது நம்ம ரஜினி படம்’ என்று தன்னை ரசிப்பவர்களையும், ‘என்ன பெரிய ரஜினி படம்?’ என்று விமர்சிப்பவர்களையும் தான் நடித்த படங்களை முதல் நாளே பார்க்கத் தூண்டும் தமிழ் சினிமாவின் ‘பாட்ஷா’ ரஜினிக்கு இப்போது வயசு 64. கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் ரஜினி குறிப்பிட்டவற்றின் தொகுப்பு இங்கே…

”சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை முதன்முதலாப் பார்த்தேன். நான் நடிச்ச காட்சி வந்ததும் பக்கத்து சீட்டுல இருந்த குட்டிப்பொண்ணு, என்னைப் பார்த்துட்டே இருந்துச்சு. படம் முடிஞ்சு வெளியே வரும்போது என்கிட்ட ஓடிவந்து, சினிமா டிக்கெட் பின்னாடி ஆட்டோகிஃராப் கேட்டுச்சு. என் முதல் ரசிகை அந்தச் சிறுமிதான்; நான் போட்ட முதல் ஆட்டோகிஃராப் அதுதான்!”

”எனக்கும் லதாவுக்கும் திருப்பதியில் கல்யாணம். பத்திரிகை நண்பர்கள் எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு, ‘யாரும் கல்யாணத்துக்கு வராதீங்க. கல்யாண போட்டோ உங்க ஆபீஸ் தேடி வரும்’னு சொன்னேன். ‘மீறி நாங்க வந்தா என்ன செய்வீங்க?’னு ஒருத்தர் கேட்டார். ‘உதைப்பேன்’னு சொன்னேன். இப்படிச் சொன்னதுக்காக பின்னாடி ரொம்ப வருத்தப் பட்டேன்!”

”சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரை போயிருந்தப்ப, மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள் என்கிட்ட, ‘உங்க நட்சத்திரம் என்ன?’னு கேட்டப்ப, ‘தெரியாது சாமி’னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள் எனக்கு ‘சூப்பர் ஸ்டார்’னு ஒரு நட்சத்திரத்தைக் கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்!”

 ”நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோல எனக்கு ஆஞ்சநேயரா இருந்த நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!”

 ”சம்மர் வந்துட்டா, ‘போன வருஷத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி’னு எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு. அதனால உடம்பு அந்த அனலைத் தாங்க முடியலைங்கிறதை மறந்துடு றாங்க!”

 ” ‘நான் யார்?’னு தெரிஞ்சுக்க எனக்குத் தனிமை தேவைப்படுது. அதனால இமயமலை போறேன். அது ரிஷிகள், முனிகள் தவம் செஞ்ச / செய்ற புண்ணிய பூமி. அங்கே ‘நான் யார்?’னு என்னைச் சுலபமாக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு அதிகம். அதான் அடிக்கடி போறேன்!”

 ”இந்தம்மா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது!”

” ‘பாபா’ படப்பெட்டிகளை அபகரித்து தகராறு செய்த ஒரு கட்சியைக் கண்டிச்சு கண்ணியமா கறுப்புக்கொடி காட்டினார்கள் என் ரசிகர்கள். அவங்களை அந்தக் கட்சிக்காரங்க அடிச்சிருக்காங்க. நான் அவங்களைப் பார்த்துக் கேட்கிறேன், ‘மதுரையில இருக்குற ரசிகர்களை அடிக்கிறீங்க. சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா… என எல்லா நாட்லயும் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவாங்க. அப்போ என்ன செய்வீங்க?’ ”

இந்தப் படத்தை 3Dயில் காண… இங்கே க்ளிக் செய்யவும்

 ”யானை, கீழே விழுந்தா… அதால சீக்கிரம் எந்திரிக்க முடியாது. ஆனா, குதிரை விழுந்தா டப்புனு எந்திரிச்சு முன்னைவிட வேகமா ஓடும். நான் குதிரை. சட்னு எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருப்பேன்!”

 ”சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை அழித்துக்காட்டிய முதல்வர் ஜெயலலிதாவை, ‘பராசக்தியின் மறு உருவமாகப் பார்க்கிறேன்’!”

 ”கமல்கூட ‘அவர்கள்’ படம் நடிச்சேன். என் சீன் எடுத்து முடிச்சாச்சு. அடுத்து கமல் நடிக்கணும். அந்த கேப்ல ஷூட்டிங் ஸ்பாட்டைவிட்டு வெளியில கிளம்பினேன். அப்போ ‘எங்கடா… சிகரெட் பிடிக்கக் கிளம்பிட்டியா? உள்ளே போடா… அங்கே கமல்னு ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான். அவன் நடிக்கிறதைப் பார்த்துக் கத்துக்கோ’னு பாலசந்தர் சார் சொன்னார்!”

 ”ஒரு தடவை ஃப்ளைட்ல அமிதாப் சாரைச் சந்திச்சேன். நான் போட்டிருந்த கறுப்பு கலர் டிரெஸைப் பார்த்தவர், ‘ரஜினி… உனக்கு வெள்ளை கலர் டிரெஸ் நல்லா இருக்கும்’னு சொன்னார். அதுக்குப் பிறகு ஒயிட் டிரெஸ்தான் நிறைய அணியுறேன்!”

 ”சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட், மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர்ஸ், ‘நாங்க தர்ற மருந்துகள் நிறையப் பேர் உடம்பு ஏத்துக்காது. தவிர இவ்வளவு சீக்கிரம் யாருக்கும் க்யூர் ஆனதே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படிக் குணமாகுது?’னு ஆச்சர்யமாக் கேட்டாங்க. ‘நீங்க கொடுக்கிற மருந்து மாத்திரைகளைவிட என் ரசிகர்கள் பிரார்த்தனைக்கு பவர் அதிகம். அதுதான் என்னைக் காப்பாத்துச்சு’னு சொன்னேன்!”

 ” ‘எம்.எஸ்.வி-யைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழி இல்லை; சந்திச்சப் பின் சோறு திங்க நேரம் இல்லை’னு வாலி சார் அடிக்கடி சொல்வார். அதுபோலதான், எனக்கு கே.பி-சார். எனக்குள்ளே இருக்கிற நடிகனை முதன்முதலாக் கண்டிபிடிச்சவர் அவர். அப்புறம்தான் உலகத்துக்குத் தெரிஞ்சேன். ‘கேமிரா முன்னாடி நடி… பின்னாடி நடிக்காதே’னு அவர் சொன்னதை இப்போ வரைக்கும் கடைப்பிடிச்சிட்டு வர்றேன்!”

‘நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?’ என்ற கேள்வியை ரஜினியிடம் எப்போது கேட்டாலும், ”இல்லை. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கேன். ஆரம்பத்தில், இந்த அந்தஸ்தை அடையப் போராடினேன். இப்போ அந்தப் புகழுக்குக் களங்கம் வராமக் காப்பாத்தப் போராடிட்டு இருக்கேன். அப்பவும், இப்பவும்… எப்பவும் நமக்குப் போராட்டம்தான்!” என்பார்.

SECOND CHANCE IN LIFE

It’s another morning……… Again I have to go to the office.

Ohh!! this is me… I shouted, having a glance at my ‘photo’ in today’s news paper.
But what the HELL it is doing in the death column?? Strange…

 

 

 

 

 

One second….Let me think, last night when I was going to bed I had a severe pain in my chest, but I don’t remember anything after that, I think I had a sound sleep.

Its morning now, ohh……. It’s already 10:00 AM, where is my coffee?

I will be late for office and my boss will angry to me..

 Where is everyone…??? I screamed.

“I think there is a crowd outside my room, let me check.” I said to myself.

So many people….. Not all of them crying….

But why some of them are crying….

WHAT IS THIS??? I’m lying there on the floor…

“I AM HERE” … I shouted!!! No one is listening.

“LOOK I AM NOT DEAD” … I screamed once again!!! No one is interested in me.

They all were looking at me on the bed.

I went back to my bed room.

“Am I dead??” I asked myself.

Where is my wife, my children, my Mom, my Dad, my friends?

I found them in the next room, all of them were crying… still trying to console each other.

My wife was crying… she was really looking sad.

My little kid was not sure what happened, but he was crying just because his Mom was sad..

How can I go without saying to my kid that I really love him, I really do care for him. ??

How can I go without saying to my wife that she is really the most beautiful and most caring wife in this world..??

How can I go without saying to my parents that I’m … just because of you??

How can I go without telling my friends that without them perhaps I would have done most of the wrong things in my life… thanks for being there always when I need them… and sorry for not being there when they really need me..

I can see a person standing in the corner and trying to hide his tears….

Ohh…. he was once my best friend, but a small misunderstanding made us part, and we both have a strong enough ego to keep us disconnected.

I went there.. And offered him my hand, “Dear friend…. I just want to say sorry for everything, we are still best friends, please forgive me.”

No response from other side, what the hell?? He is still preserving his ego, I am saying sorry… even then!!!

I really don’t care for such people.

But one second…… It seems he is not able to see me!!!! He did not see my extended hand.

My goodness… AM I REALLY DEAD???

I just sat down near ME; I was also feeling like crying…

“OHH ALMIGHTY!!!! PLEASE JUST GIVE ME FEW MORE DAYS…”

I just wasn’t to make my wife, my parents; my friends realize that how much I love them.

My wife entered the room, she looks beautiful.

“YOU ARE BEAUTIFUL” I shouted.

She didn’t hear my words, in fact she never heard these words because I never said this to her.

“GOD!!!!” I screamed… a little more time plzzzzzzzzzzzzzz…

I cried…

One more chance please… to hug my child, to make my mom smile just once, to feel my dad proud of me at least for a moment, to say sorry to my friends for everything I have not given to them, and thanks for still being in my life….

Then I looked up and cried!!!!

I shouted….

“GOD!!!! ONE MORE CHANCE PLEASE!!!!”

“You shouted in your sleep,” said my wife as she gently woke me up. “Did you have a nightmare?”

I was sleeping….

Ohh that was just a dream….

My wife was there… she can hear me…

This is the happiest moment of my life…

I hugged her and whispered…. “YOU ARE THE MOST BEAUTIFUL AND CARING WIFE IN THIS UNIVERSE….. I REALLY LOVE YOU DEAR”

I can’t understand the reason of the smile on her face with some tears in her eyes, still I’m happy….

“THANK YOU GOD FOR THIS SECOND CHANCE.”

SO, Now it’s not late… Forget your Egos, your Past… and Express your love to others…. Be friendly… Keep smiling…… for ever…….

“நடிக்கும்போது நான் குழந்தை; இயக்கும்போது நான் தாய்” : சசிகுமார்

Imageஇயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் சசிகுமார். தன் குருநாதர் பாலு மகேந்திராவுக்காக அவர் இப்போது மீண்டும் ஒரு தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் ‘தலைமுறைகள்’ படத்தை தயாரித்து வருகிறார். அத்துடன் ‘பிரம்மன்’ படத்தில் நாயகனாகவும் பிசியாக இருக்கும் சசிகுமாரை, ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘தலைமுறைகள்’ எந்த மாதிரியான கதை?

ஒரு தயாரிப்பாளராக எனக்கு ரொம்ப திருப்தியாக அமைஞ்ச படம் ‘தலைமுறைகள்’. இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவருக்குமே, உடனே தனது குடும்பத்தைப் பார்க்கத் தோணும். அப்படியொரு ஆத்மார்த்த உணர்வை இந்தப் படம் நிச்சயம் ஏற்படுத்தும். வெற்றிக்காக ஓடுகிறோம் என்கிற பெயரில் உறவுகளை இழந்துவிட்டு பரபரப்பு உலகில் வாழும் நாம், ஒரு கட்டத்தில் நிம்மதிக்காகத் திரும்பிப் பார்க்கிற நிலை வரும். அப்போது நம் பின்னால் உறவுகள் எனச் சொல்லிக்கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள். கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் தாத்தா பாட்டி மடியில் தலை சாய்க்கும் நிம்மதியைப் பெற முடியுமா? இத்தகைய தெளிவை இன்றைய தலைமுறைக்கு சொல்கிற படம்தான் ‘தலைமுறைகள்’.

பாலுமகேந்திரா – சசிகுமார் கூட்டணி எப்படி சாத்தியமானது?

திடீரென்று ஒருநாள் பாலு மகேந்திரா சார் போன் பண்ணினார். ‘உன்னைப் பாக்கணுமே’ என்றார். ‘நானே வரேன் சார்’ என்று சொன்னேன். ‘எனக்குத்தான் காரியம் ஆகணும்… நான் தான் வருவேன்’ என்று சொன்னார்.‘தலைமுறைகள்’ கதையைச் சொல்லத் தொடங்கினார். ‘வேண்டாம் சார், நிச்சயம் நான் தயாரிக்கிறேன். நீங்கள் என்னிடமெல்லாம் கதை சொல்லக்கூடாது’ என்றேன். தங்கத்தை உரசிப் பார்க்கும் வியாபாரத்தனம் எனக்குத் தெரியாது. ஆனாலும், விடாப்பிடியாகக் கதை சொன்னார். சொன்ன கதையும் சொல்லிய விதமும் இன்றைக்கும் எனக்குள் ஈரம் மாறாத நினைவுகளாக நிற்கின்றன. மொத்தத்தில் பாலு மகேந்திரா சாரின் கதையைத் தயாரிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எல்லாம் முடிவான உடனே, ஒரு நாள் அவருடைய அலுவலகம் போனேன். ஒரு புகைப்படத்தைக் காட்டி, எப்படியிருக்கு என்று கேட்டார். ‘சார்.. இவரோட கண்கள் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு. இவர் தான் நடிக்கிறாரா’ என்று கேட்டேன். ‘நான் தான் அது’ என்றார். நடிகராக பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் கம்பெனிக்குரியது.

Image

‘தலைமுறைகள்’ படத்தின் ஒளிப்பதி வாளர், இயக்குநர், நடிகர், எடிட்டர் எல்லாமே பாலுமகேந்திராதான். இதை ஒரு தயாரிப்பாளராக எப்படி பார்க்கிறீர்கள்?

நாம்தான் பாலுமகேந்திராவுக்கு வயசா கிட்டதா நினைக்கிறோம். ஆனால், அவர் இப்போதான் ரொம்ப இளமையான ஆளா இருக்கார். ஒவ்வொரு பிரேமிலும் தன் முழு எண்ணமும் வரணும் என்று நினைக்கிறார். காட்சிகளைப் புதுமையாக்கவும் அழகு படுத்தவும் அற்புதமாக யோசிக்கிறார். இந்த படத்தில் நான் ஒரு காட்சியில் மட்டும் நடிக்கிறேன். 800 பேரை வைச்சு ஒரு சீனை ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கொண்டு இருந்தவர், ‘இந்த இடத்தில் நில்… இங்கே நட… இங்கே பேசு…’ எனச் சொன்னார். மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை பிரிவியூவில் பார்த்து மிரண்டு விட்டேன். அவர் படத்தில் நடித்தது சந்தோஷம்.

இயக்குநர் சசிகுமாரை 2014-ல் பார்க்கலாமா?

இப்போ ‘பிரம்மன்’ படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். இன்னும் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கேன். 2014ல் படம் இயக்கணும். ஆனாலும், நான் நடிக்கிற படங்கள் முடிந்த பிறகுதான் இயக்கத்தில் முழுமையாக இறங்க முடியும். பிறர் படங்களில் நடிக்கிற போது நான் குழந்தை. ஒரு படத்தை இயக்கும்போது நான் தாய். ஒரு படத்தைத் தயாரிக்கும்போது நான் பிரசவம் பார்க்கும் மருத்துவர். இந்த மூன்றிலுமே முழுமையான பரவசத்தை உணர்கிறேன். ஆனாலும், தாய்மை சுமக்கும் தருணத்துக்காகவே காத்திருக்கிறேன்.

முன்னணி நடிகர்களை வைச்சு படம் இயக்க ப்ளான் பண்ணவே மாட்டீங்களா?

முன்னணி நடிகர்களுக்கு ஏற்றவாறு நல்ல கதை அமையணும். அப்படி அமைஞ்சா இயக்கத் தயாரா இருக்கேன். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். அதுவரைக்கும் சஸ்பென்ஸ்.

ஒவ்வொரு பேட்டியிலும் ‘எனது சிஷ்யன் சசிகுமார்’ என பாலா பெருமையாக சொல்கிறாரே?

இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்? நம்மளோட வெற்றியையும் குணத்தையும் சில பேருடைய வார்த்தைகள்தான் தீர்மானிக்குது. அவருடைய அபிப்பிராயத்தையும் அன்பையும் பெற்றிருப்பது என் சொத்து. என் வங்கியில் நான் வைத்திருக்கும் பெரிய தொகை அது. அந்த வார்த்தைகளுக்குத் தகுதி உள்ளவனாக என்னைத் தக்க வைத்துக் கொள்வதே எனக்கான இலக்கு.

யாருக்குமே தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைப் படிக்க வைக்கின்றீர்களாமே?

இரண்டு வருடங்களுக்கு முன்.. ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த நேரம். 1100-க்கு மேல் மதிப்பெண் எடுத்தும் பொறியியல் படிப்பு படிக்க வசதி இல்லாமல் தவிப்பதாகச் சொல்லி ஒரு மாணவரின் நிலையை எனது நண்பர் ஒருவர் சொன்னார். அந்த மாணவரிடம் பேசியபோதுதான் பணம் இல்லாமல் படிப்பை இழந்து தவிக்கும் எத்தனையோ மாணவர்களின் நிலை எனக்குத் தெரிய வந்தது. அவர்களுக்கு சத்தமில்லாமல் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். அதற்காக நிறைய கல்லூரிகளிடம் நானே பேசுகிறேன். முடிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி உதவிக்கு வேண்டுகிறேன். நான் இறங்கிப் போவதால் ஒரு மாணவன் தன் வாழ்வில் ஏறிப் போகிறான் என்றால், அதை லட்சம் முறை செய்யவும் நான் தயார்.

 நன்றி – தி ஹிந்து