சூரியன் 2030ம் ஆண்டில் உறங்கும் நிலைக்கு செல்லும்: அறிவியலாளர்கள் எச்சரிக்கை

201507111813311520_Scientists-Warn-Sun-Will-Go-to-Sleep-in-2030-Could-Cause_SECVPF

இங்கிலாந்தின் வேல்ஸ் நகரின் லேண்டட்னோ பகுதியில் வானியல் வல்லுநர்கள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகள் என 500 பேர் கூடி தேசிய வானியல் சந்திப்பு 2015 (நம்2015) என்ற பெயரிலான மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு கடந்த ஜூலை 5 முதல் 9ந்தேதி வரை நடந்தது.  இங்கிலாந்தில் பெரிய அளவில் தொழில்முறை வானியல் தொடர்புடைய நிகழ்ச்சியாக இந்த மாநாடு நடைபெறுவது வழக்கம்.  இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு துறைகளில் தங்களது சமீபத்திய ஆய்வு பணிகள் குறித்த விவரங்களை சமர்ப்பித்திடுவர்.  இந்த நம்2015 மாநாட்டில் பேசிய நார்தம்ரியா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வேலண்டினா ஜர்கோவா என்பவர் சூரியனின் இயக்க சக்தி குறித்த புதிய மாடல் ஒன்றை குறித்த முடிவுகளை வெளியிட்டுள்ளார்.  இந்த புதிய மாதிரி வடிவம் சூரியனின் செயல்பாடு குறித்து எதிர்பாராத வகையில் துல்லியமிக்க கணிப்புகளை உருவாக்குகிறது.

நமது சூரியன் 11 வருட இயக்க சுற்றுகளை கொண்டுள்ளது.  அது உச்சகட்ட காலங்களில், சூரிய கதிர்வீச்சுகளை வெளியிடுவதுடன சூரிய புள்ளிகளையும் கொண்டிருக்கும்.  இந்த காலகட்டங்களில் அதன் மேற்பரப்பில் இருந்து காந்த தன்மை கொண்ட ஆற்றல்மிக்க துகள்கள் வெடித்து சிதறி விண்வெளியில் நீரோடை போன்று பரவ கூடும்.  இந்த வெளியீடுகள் செயற்கை கோள்கள் மற்றும் பூமியில் உள்ள மின்சார இணைப்புகள் ஆகியவற்றை பாதிக்க கூடும்.  இந்த செயல்பாடு உறங்கும் காலங்களில் நின்று போகும் சூழலும் உள்ளது.  ஆனால் இந்த 11 வருட சுற்றில் சூரியனின் அனைத்து செயல்பாடுகளையும் கணிக்க இயலுவதில்லை.  அது சில நேரங்களில் கணிப்பிற்கு உட்படாத ஒன்றாகவும் உள்ளது.

ஜர்கோவா மற்றும் அவரது சக பணியாளர்கள் (பிராட்போர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் சைமன், லமனோசோவ் மாஸ்கோ மாநில பல்கலை கழகத்தை சேர்ந்த டாக்டர் ஹெலன் பப்போவா மற்றும் ஹல் பல்கலை கழகத்தை சேர்ந்த டாக்டர் செர்கெய் ஜர்கோவ்) ஆகியோர் இந்த வேறுபாடு குறித்து அறிய இரட்டை டைனமோ முறை ஒன்றை கண்டறிந்துள்ளனர்.  அனைத்து நட்சத்திரங்களையும் போன்று, டைனமோவின் இயக்கம் போன்று சூரியன் மிக பெரிய அணுக்கரு பிளவு உலை போன்று சக்தி வாய்ந்த காந்த புலங்களை உருவாக்க கூடியது.

ஜர்கோவாவின் குழு உருவாக்கியுள்ள மாதிரி வடிவத்தின்படி, சூரியனில் இரண்டு டைனமோக்கள் செயல்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.  ஒன்று மேற்பரப்பிலும் மற்றொன்று அதன் மைய பகுதியிலும் உள்ளது.  அதன்படி, இதற்கு முன்பிருந்ததை விட மிக துல்லியமுடன் சூரிய சுற்றின் நோக்கங்கள் குறித்து இந்த இரட்டை டைனமோ முறை விளக்க கூடும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.  வருங்காலத்தில் சூரியனின் செயல்பாடு குறித்து மேம்பட்ட கணிப்புகளுக்கு இது வழிவகுக்கும் என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த இரண்டு டைனமோக்களிலும் காந்த அலைகளுடன் தொடர்புடைய பொருட்கள் காணப்படுகின்றன.  சூரியனின் உட்புற பகுதியில் உள்ள இரு வேறு அடுக்குகளில் இருப்பது போன்று இவை உள்ளன.  அவை இரண்டும் தோராயமுடன் 11 வருட கால அளவில் அதிர்வெண்களை கொண்டு உள்ளன.  இந்த அதிர்வெண் சிறிதளவு வேறுபட கூடும் (இரண்டிலும்) என்று ஜர்கோவா கூறியுள்ளார்.  இந்த இரு காந்த அலைகளும் ஒன்றை ஒன்று பலப்படுத்தி அதிதீவிர செயல்பாட்டு தன்மையுடன் இயங்கும்.  அல்லது அவை இரண்டும் உறங்கும் நிலைக்கு செல்லும்.

இந்த முறையில் தங்களது கண்டுபிடிப்புகளை குறித்து விளக்கி கூறியுள்ள ஜர்கோவா தலைமையிலான குழுவினர் அதன்படி வருகிற 2030ம் ஆண்டில் சூரியன் உறங்கும் நிலைக்கு செல்லும் என்றும் அதன் வெப்பநிலை அதிக அளவில் குறையும் என்றும் தங்களது கணிப்பு குறித்து கூறியுள்ளனர்.  இதனால் ஐஸ் ஏஜ் எனப்படும் சிறிய அளவிலான புதிய பனி காலம் தோன்ற கூடும் என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s