மரண தண்டனை ஒழிப்பு ! திசை மாறும் காற்று?

Image

தீவிரவாதச் செயலா இல்லையா ?

மாநில அரசின் அதிகாரமா ? இல்லையா ? 
நான்கு பேருக்குப் பதில் ஏழு பேரை விடுவித்தது தவறா ?
அரசியலா இல்லை ராஜதந்திரமா ?
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்குமா இல்லை 14 வருடங்களா?
அப்சல் குருவுக்கு ஒரு நியாயம் , தமிழனுக்கோர் நியாயமா ?
3 நாள் அவகாசம்  சரியா தவறா ?
ராஜீவ் கொலைக்கு நீதி செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா ?
23 வருடங்கள் கொடுந்தண்டனை அனுபவித்திருக்கிறார்களே போதாதா ?
எல்லாத் தமிழர்களும் ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவா ? 
24 மணிநேரத்தில் விடுவிக்க முயற்சிப்பது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் காயப்படுத்தும் செயலா ?
கேள்விகளாலும் , விவாதங்களாலும் -சுடுமணலும் , கூர்ப்பாறைகளாலும் முட்கள்ளிகளாலும் நிரம்பிய பாலை போல கொதித்துக் கிடக்கிறது பொதுவெளி !மரண தண்டனை ஒழிப்பென்னும் காற்றைத்தான் காணவில்லை. 
 
ராஜீவைத் தன் தலைவனாக , கவர்ந்திழுக்கும் அவரின் ஈர்ப்புசக்திக்கு உட்பட்டுத் தொண்டர்களாய் வாழ்ந்த தமிழர்கள் உண்டு, அவரின் சிங்களத் தமிழ் கொள்கைகளைத்  தவறென்றும் , சரியென்றும் வாதப் பிரதிவாதங்கள் முன்வைத்த தமிழர்கள் உண்டு . அவரின் தவறான முடிவுகளின் காரணமாகவே  இலங்கைத் தமிழர் வாழ்வு சீரழிந்தது என்று அவரை வெறுத்த தமிழர்களும் உண்டு , ஆனால் வன்முறையோ , எதிர் வன்முறையோ காரணம் சொல்லி , அவரின் கொலையைக் கொண்டாடிய தமிழர்கள் மிகக் குறைவே! மற்ற எல்லா இந்தியர்களையும் போல , ஒரு அரசியலும் தெரியாத  , தொடர் நிகழ்வுகளின் அறிவும் ,குற்றங்களும் அதற்க்கான பின்னணிக் காரணங்களும் அறியாத ஒவ்வொரு சாதாரணத் தமிழனும் அதிர்ச்சி அடைந்தது நிஜம் , அதன் காரணமாகவே தமிழகம் ஈழப் போராட்டத்துக்கான தன் ஆதரவுக் கரங்களைச் சுருக்கிக் கொள்ள ஆரம்பித்ததும் நிஜம் . இப்போதும் தமிழர்களின் பெருவாரி மனோநிலை எவ்வகையான jingoism மும் இல்லாதிருப்பதே என்றெண்ணுகிறேன் .
மிகச் சிறுபான்மையான இன்னும்  ஒரு கூட்டத்தின் மனநிலை பற்றி எண்ணிப் பார்க்கிறேன் . இந்தக் கூட்டத்தில் ,எந்தச்  சார்பும் இல்லாமல் மனிதமும் , மனிதநேயமும் கொண்ட , இரட்டை நிலைப்பாடுகள் இல்லாத பல நல்ல மனங்கள் ஈழப் போராட்டத்தின்போது தமிழர்கள் அரச வன்முறைக்கு உட்பட்டபோதும் , தமிழீழப் போராளிக் குழுக்கள் தமக்குள் அழித்தொழிப்பில் ஈடுபட்டபோதும் , தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்க் குழந்தைகளைக் கட்டாய இராணுவ ஆளெடுப்பில் பொடியன்களாக்கிய போதும் ,இந்திய அமைதிப்படை கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளின் போதும் , விடுதலைப் புலிகள் இலங்கை மண்ணிலும் , இந்திய மண்ணிலும் நிகழ்த்திய வன்முறைகளின் போதும் , ராஜீவ் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் தமிழ்நாட்டிலேயே கொல்லப்பட்ட போதும், தமிழீழ அகதிகள் தமிழகத்திலும் , உலகமெங்கும் சிதறிச் சின்னாபின்னப் பட்டபோதும் , கடைசிகட்டப் போரில் , இலங்கை ராணுவம் நிகழ்த்திய ஈவு இரக்கமற்ற  இனப்படுகொலையின் போதும் , மக்களைத் தம் போரில் மனிதக் கேடயமாய்ப் பயன்படுத்திய போதும் , ராஜீவ் கொலைவழக்கின் நீதிவிசாரணையின் சருக்கல்களின்போதும்  எந்தச் சார்பும் இல்லாமல் வன்முறை எதிர்ப்பும் , மரண தண்டனை இந்தியாவில் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் கொண்ட பல தமிழ் உள்ளங்கள் உண்டு . இன்று 23 வருடங்கள் தண்டனை அனுபவித்த பின்பு , மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும்போது இந்த மனித நேயக் காவலர்கள் செய்ய வேண்டியது , இதனை ஒரு பெரு வெற்றியாகக் கொண்டாடாமல்  , யாருக்கு எதிராய்த்  தவறிழைக்கப்பட்டதோ , அவரின் குடும்பத்தாரின் வலிகளுக்கு , வேதனைகளுக்கு மதிப்பளித்து அமைதியாய் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் இந்தத் தீர்ப்பை எப்படி மற்ற காத்திருப்போருக்காகவும் பயன்படுத்துவது என்பது பற்றியும் , மரண தண்டனை ஒழிப்பை மேலும் முன்னெடுப்பது எப்படி என்பதுவும் தான், மரணதண்டனை ஒழிப்பு பற்றிய எந்த நிலைப்பாடும் இல்லாமல் இந்தத் தீர்ப்பை அரசியலாக்க முயற்சிக்கும் எல்லார் கைகளில் இருந்தும் இந்த மொத்த விஷயத்தையும் உருவி எடுத்து , நிர்பயா பாலியல் வன்முறை வழக்கின் குற்றவாளிகள் ஆனாலும் , மற்ற 402 முடிவெடுக்கப்படாத குற்றவாளிகளின் நிலையானாலும் , குற்றம் இழைக்கப்பட்ட குடும்பத்தின் , சமூகத்தின் வேதனைகளுக்கு உரிய மதிப்போடு , அவர்களையும் மன்னிப்பின்பால் மனம்மாற்றி , மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனதில் தான் செய்த குற்றத்தின்பால் கழிவிரக்கமும் , பச்சாதாபமும் , தவறுணர்ந்து தன்னைத் தான் திருத்துதலும் கொள்ள, பணியாற்ற முடியுமானால் ….பச்ச் … Idealism  என் கண்ணை மறைக்கிறது , ஆனால் இதைத் தவிர வேறு எந்த நிலைப்பாட்டையும் இவர்களுக்குப் பரிந்துரைக்க என்னால் முடியவில்லை! எல்லா வகையான jingoism த்தையும் மனது மறுதலிக்கிறது! குற்றம் புரியத் தூண்டிய விஷயம் , குற்றம் இழைக்கப்பட்டவனின் சுற்றத்தின் மனநிலை , குற்றம் இழைத்தவனின் மனமாற்றம் , நீடித்த தண்டனைக்காலங்களும் , தனிமைச் சிறையும்  தரும் மனப் பிறழ்வும் வேதனைகளும் என எல்லாருக்காகவும் கண்ணீர் சுரந்து பார்வையை மறைக்கிறது ! கண்ணீருக்கு நடுவில் ஒன்று மட்டும் புரிகிறது .JINGOISM IS NOT THE WAY ! A HEALING HAND TOUCHES BOTH THE VICTIMS AND THE PERPETRATORS CHEEKS WITH EQUAL AFFECTION AND FORGIVENESS.WHEN DO WE RISE AS HEALERS ????ITS A LONG WAY TO GO BEFORE WE INFLUENCE THE JINGOISTIC MINDS WITH OUR HEALING TOUCH. 
 
நன்றி – அலெக்ஸ் பால் மேனன்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s