‘நம்ம ஸ்டைல்னு ஏதாவது இருக்கணுமே!’

November 14, 2013

 அதிகம் பேசாத, ஆனால் அதிகம் பேசப்படும் விஜய்யின் பெர்சனல்ஸ் சில…

இந்தியில் அமிதாப், தெலுங்கில் நாகேஸ்வர ராவ்… இவர்களுடன் இணைந்து நடிக்க விஜய்க்கு வாய்ப்பு வந்தது. அதற்காக மும்பை, ஹைதராபாத் சென்று அவர்கள் இருவரையும் சந்தித்துவந்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன். ஆனால், ‘தெரியாத மொழியில் ஈடுபாட்டோடு நடிக்க முடியாது’ என்று தவிர்த்துவிட்டார் விஜய்.

 சம்பளம் கோடிகளில் தந்தியடித்தாலும், தினசரி செலவுகளுக்கு உதவியாளர் ராமுவிடம்தான் பணம் வாங்குவார். அவர் மட்டுமல்ல அப்பா, அம்மா, சங்கீதா எல்லோருக்கும் ஏ.டி.எம். ராமுதான்!

 சமீபத்தில் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கே பூகம்பம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பதறிப்போய் ‘உடனே திரும்பிடுங்க’ என்று விஜய்யிடம் சொன்னாராம். ஆனால், அப்போது அங்கே இருந்த க்ளைமேட் வருடத்துக்கு ஒருமுறைதான் வரும். தவிர, அதுதான் பாடலுக்குத் தேவையான கலர்ஃபுல் கேன்வாஸ் என்பதால் ‘சுனாமியே வந்தாலும் பரவாயில்லை’ என்று வேலையை முடித்துவிட்டுத்தான் திரும்பி இருக்கிறார்கள் ‘ஜில்லா’ பாய்ஸ்.

 விஜய்யின் சமீபத்திய பளபள பர்ச்சேஸ் ரோல்ஸ்ராய்ஸ் கார். பால்ய நாட்களில் விஜய்யை பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்றுவந்த ராஜேந்திரன்தான் இப்போதும் விஜய்யின் டிரைவர். லாங் டிராவல் போகும்போது, ‘விஜய் கைல கார் ஸ்டீயரிங்கைக் கொடுக்காதீங்க’ என்று  வீட்டில் சொல்லி அனுப்புவார்களாம். ஆனால், சிட்டி லிமிட் தாண்டியதும் அடம்பிடித்து டிரைவர் இருக்கையை ஆக்ரமித்து விடுவார் விஜய்.

Image

விஜய் அடிக்கடி சுற்றுலா செல்லும் நாடு துபாய். ஒரு வாரம் கேப் கிடைத்தாலும் குடும்பத்தோடு துபாய் பறந்துவிடுவார். அங்கே உலகிலேயே உயரமான புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் இருக்கும் அர்மானி ஹோட்டல்தான் விஜய்யின் ஃபேவரைட் ஸ்பாட். ஒட்டுமொத்த துபாயிலும் என்னென்ன ஷாப்பிங் பண்ணமுடியுமோ, அது எல்லாமே அங்கேயே கிடைக்கும் என்பதுதான் சிறப்புக் காரணம்.

 தமிழ்நாட்டில், அடிக்கடி அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்குப் போவார். முன்பெல்லாம் பிராட்வே புனித அந்தோணியார் சர்ச்சுக்குப் போவார். இப்போதும் போக ஆசைதான். ஆனால், ‘உள்ளே போறதுக்குள்ளே கூட்டம் கூடிருது’ என்று அங்கு போகமுடியாத வருத்தத்தை வீட்டில் சொல்வாராம்.

 கதை கேட்டு முடிவெடுக்கத்தான் ரொம்ப யோசிப்பார். ஆனா, கமிட் ஆன பிறகு டைரக்டர் சொல்வதை இம்மி பிசகாமல் அப்படியே செய்து விடுவார் விஜய். ‘டான்ஸ்ல மட்டும் ஏதாவது ஐடியா சொல்வேன். நம்ம ஸ்டைல்னு அதுல ஏதாவது இருக்கணுமே’ என்று கண் சிமிட்டி சிரிப்பார் ப்ரோ!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s